Aranmanai 2 Movie Story
அரண்மனை 2 படம் ஒரு காமெடி கலந்த பேய் படம். படத்தின் கதை பழைய காலத்து பேய் கதை தான்.
ஒரு ஊரில் சக்தி வாய்த்த பெரிய சாமி சிலை ஒன்று இருக்கிறது. இதன் கும்பாபிசேகம் காரணமாக 10 நாள் சாமி சிலையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாத்தி வைக்கின்றனர். இந்த 10 நாள் அந்த அம்மனுக்கு சக்தி இருக்காது. இதை பயன் படுத்தி ஊரில் உள்ள செய்வினை செய்பவர்கள் தங்களது பில்லி சூனியத்திர்கு பயன்படுத்த ஆவிகளை வரவைக்க மந்திரம் சொல்லும் போது ஒரு பெரிய சக்தி உடைய ஆவி வெளியே வருகிறது. அந்த ஆவி அந்த ஊரில் உள்ள அரண்மனைக்குள் போகிறது.
அங்கு இருக்கும் ராதா ரவியை மாடியுள் இருந்து தள்ளி விடுகிறது. இதனால் அவர் கோமா செல்கிறார். இவரது மகன் சித்தார்த் மற்றும் இவருடன் திருமணம் ஆகா போகும் த்ரிஷாவும் இவருடன் அந்த அரண்மனைக்கு ராதா ரவியை பார்த்துக்கொள்ள வருகின்றனர்.
இன்னொரு மகனும் அவரது மனைவி மற்றும் குழந்தை அரண்மனை வீட்டிற்கு வருகின்றனர். ராதாரவியை பார்த்து கொள்ளும் நர்ஸ்ஸாக பூனம் மற்றும் சித்த வைத்தியராக சூரி மேலும் வீட்டு வேலைகாரர்கலாக மனோ பாலா மற்றும் கோவைசரளா வருகிறார் . த்ரிஷாவிற்கு அண்ணனாக சுந்தர் சி நடிக்கிறார்.
வீட்டில் பல பிரச்னை நடக்கிறது. பேய் இருப்பதை சித்தார்த் மற்றும் த்ரிஷா உணர்கின்றனர். அப்போது வீட்டில் வரும் சுந்தர்.சி பேய் இருப்பதை உறுதி செய்ய வீடு முழுவதும் கேமரா வைக்கிறார். அப்போது கரண்ட் கட் ஆகிறது சித்தார்த் அண்ணனை பேய் இழுத்து செல்கிறதை பார்த்த சுந்தர்.சி பின்னால் செல்கிறார். அப்போது கரண்ட் வந்து விடுகிறது. அனால் அவரை காணவில்லை.
எனவே சுந்தர்.சி, சித்தார்த், பூனம் மூவரும் கேமராவில் கரண்ட் வந்ததில் இருந்து பார்க்கும் போது சித்தார்த் அண்ணனை இழுத்து செல்லும் அந்த பேய் ஹன்சிகா என்பது தெரிய வருகிறது .
ஹன்சிகா யார் ? ஏன் இவர்களை கொள்ளுகிறார் ? இவர்கள் இந்த பேய்யுடம் இருந்து தப்பினார்களா ? அந்த சாமி சிலை மீண்டும் சக்தி பெற்று இவர்களுக்கு உதவியதா என்பது மீதி கதை .