Manithan Tamil Movie Review and Rating | Manithan Padathin Vimarsanam

Related Posts

Share This Post

manithan review
Manithan Movie Review 




MANITHAN MOVIE RATING – 3.5 / 5

Movie Name : Manithan 

Director : I. Ahmed
Cast : Udhayanidhi Stalin, Hansika Motwani, Prakash Raj
Music : Santhosh Narayanan

MANITHAN MOVIE REVIEW :

மனிதன் படம் ஒரு உண்மைக்காக போராடும் சாதாரண வக்கீல்லுக்கும் ஒரு பொய்க்காக போராடும் பிரபல வக்கீல்லுக்கும் நடக்கும் போராட்டம் தான் மனிதன்.

கதை களம் :

உதயநிதி ஒரு வக்கீலாக இருக்கிறார். எந்த கேசிலும் முறையாக வாதாட தெரியாத அனைவராலும் நக்கல் செய்யக்கூடிய  வக்கீலாக இருக்கிறார். இவரது முறை பெண் தான் ஹன்சிகா.

இவர்கள் காதலிப்பது இரண்டு குடும்பத்திற்கும் தெரியும். இருபினும் உதயநிதி நல்ல திறமையான வக்கீலாக ஆகா வேண்டும் பிறகு தான் கல்யாணம் பற்றி வீட்டில் பேச முடியும் என்ற நிலையுள்.

எப்படியாவது சாதிக்கவேண்டும் என்று சென்னைக்கு வருகிறார். இவரது உறவினராக விவேக் நடித்துள்ளார் அவரும் வக்கீல் தான். உதயநிதி சென்னைக்கு வந்து 3 மாதங்கள் ஆகியும் ஒரு கேசும் கிடைக்கவில்லை. மறுபடிடும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்கிறார்.

அந்த சமையத்தில் ஒரு பணக்கார பையன் ரோட்டு ஓரத்தில் படுதிருதவர்கள் மேல் காரை ஏற்றி விபத்து நடக்கிறது ஏற்றியவர்கள் இறந்து போகிறார்கள். இதற்கு அந்த பையன் எந்த தப்பும் செய்யவில்லை என்று வாதட பிரபல வக்கீல் பிரகாஷ் ராஜ் வாதாடி அவனை நிரபராதி என நிருபிக்கிறார்.

இந்த நிலையுள் இதற்கு எதிராக உதயநிதி மனு கொடுக்கிறார். இதற்கடுத்து இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ? படத்தில் சில ட்விஸ்ட் ? கடைசியுள் உதயநிதி வென்றாரா என்பது மீதி கதை.
.

படத்தில் நடித்தவர்கள் :

உதயநிதி நடித்த படத்தில் சிறந்த நடிப்பு என்று கண்டிப்பாக இந்த படத்தை கூரலாம். காதல், செண்டிமெண்ட், வசனம் என அனைத்தையும் இயல்பாக நடித்துள்ளார். ஹன்சிகா காதல் காட்சிகள், உதயநிதியை ஊக்குவிக்கும் காட்சிகளில் நடிப்பில் எந்த குறைக்கும் வைக்கவில்லை.
ஐஸ்வர்யா ராஜேஷ் மீடியா பெண்ணாகவும், உதயநிதிக்கு உதவி செய்யும் தோழியாகவும் வருகிறார் அவரது நடிப்பில் நன்று. விவேக் சும்மா அவர் வரும் காட்சிகளில் அசால்டாக காமெடி செய்துவிட்டு செல்கிறார். 
எதிர் வக்கீலாக பிரகாஷ் ராஜ் அவரது நடிப்பில் பிரமாதம் கண்டிப்பாக அவரை தவிர வேறு யாரும் இந்த காதாப்பாத்திரதிர்க்கு  கச்சிதமாக இருக்க மாட்டார்கள். ஜட்ஜ்ஜாகா ராதா ரவி வருகிறார் சும்மா நடிப்பின் உச்சம் பேச்சிலே சும்மா நடிப்பை வெளிபடுத்துகிறார். 
நடித்த அனைவரும் படத்தில் எந்த குறையும் வைக்காமல் நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் .

படத்தின் பிளஸ் :

கண்டிப்பாக உதயநிதி, பிரகாஷ் ராஜ், ராத ரவி தங்களது நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்துகின்றனர். படத்தில் ஏழைகளின் பிரச்சனையை சொல்லிருக்கும் விதம் நன்று. கிளைமாக்ஸ் காட்சி படத்தின் கூடுதல் பலம். பின்னணி இசை நன்று. படத்தில் பாடல்கள் ஓகே.

படத்தின் மைனஸ் :

படத்தில் முதல் பாதியுள் கொஞ்சம் தேவையற்ற காதல் காட்சிகள் உள்ளன. படத்தில் பல காட்சிகளில் பின்னணியுள் பாடல் வருகிறது அது கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது. மற்றபடி படத்தில் மைனஸ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எதுவும் இல்லை.

மொத்தத்தில் மனிதன்  :

கண்டிப்பாக உதயநிதி ஒரு மனிதனாக அனைவரது மனதிலும் நின்றுவிட்டார். படம் நண்பர்களுடன், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். அணைத்து தரப்பினருக்கும் இது ஒரு நல்ல படமாக அமையும்.

MANITHAN MOVIE RATING – 3.5 / 5

Tags : manithan Review, Tamil Movie Manithan Vimarsanam, Manithan Full Review In tamil, MAnithan Thirai Vimarsanam, Hansika Udhayanithi Manithan Rating.