![]() |
Vetrivel Rating |
Movie Name : Vetrivel
Music : D. Imman
VETRIVEL MOVIE REVIEW :
கதை களம் :
சசிகுமார், மியா ஜார்ஜ் இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லாமல் காதலிகின்றனர். இந்த நிலையுள் சசிகுமார் தம்பியும், பக்கத்து ஊரு ப்ரெசிடெண்ட் பிரபு மகளும் காதலிகின்றனர்.
இந்த நிலையுள் மியா ஜார்ஜ் காதலை சொல்ல முடிவு செய்கிறார் ஆனால் சொல்ல முடியாமல் போகிறது. அவர் 10 நாள் தனது ஊருக்கு சென்று வந்தவுடன் காதலை சொல்லலாம் என முடிவு செய்கிறார். சசிகுமார்ரும் மியா ஜார்ஜ் வந்தவுடன் காதலை சொல்லலாம் என காத்திருக்கிறார்.
இந்நிலையுள் பிரபுவிடம் சசிகுமாரின் தந்தை தனது பையனுக்கு உங்கள் பெண்ணை தர முடியுமா என கேட்கிறார் அதற்க்கு பிரபு எனக்கு சாதியும், ஊரு மக்களும் தான் முக்கியம் என பெண் தர மறுக்கிறார்.
இதனால் திருவிழாவில் வைத்து சசிகுமார்ரும் அவரது தம்பியும் அந்த பெண்ணை கடத்த முடிவு செய்கின்றனர். அதற்கு நாடோடிகள் படத்தில் வரும் 4 பெரும் வருகின்றனர். பெண்ணையும் கடத்துகிறார்கள் ஆனால் கடத்தி வந்த பெண் வேறு ஒரு பெண்.
இதற்கு அடுத்து சசிகுமார்க்கு என்ன பிரச்னை வருகிறது ? மியா ஜார்ஜ், சசிகுமார் காதல் என்ன ஆனது ? தம்பியுன் காதலை சசிகுமார் சேர்த்து வைத்தாரா ? என்பது மீதி கதை
.
படத்தின் பிளஸ் :
சசிகுமார் தான் படத்தின் பெரிய பலம். காதல், செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் என அனைத்திலும் அவரது ஸ்டைலில் அசத்தியுள்ளார். மேலும் படத்தில் வரும் மூன்று கதாநாயகிகளின் நடிப்பும் நன்று. படத்தில் அனைவரது நடிப்பிலும் எந்த குறையும் இல்லை. சசிகுமார் படத்தில் என்ன இருக்க வேண்டுமோ அனைத்தும் உள்ளது. தம்பி ராமையா காமெடி நன்று. இமான் இசையுள் இரண்டு பாடல்கள் நன்று.
படத்தின் மைனஸ் :
படத்தின் கதை பெரிதாக ஒன்றும் இல்லை வழக்கமான தமிழ் படங்களின் கதை தான். மேலும் படத்தில் என்ன நடக்க போகிறது என்பதை நம்மால் முன்பே தெரிந்துகொள்ள முடிகிறது. இரண்டாம் பாத்தியுள் படம் கொஞ்சம் மெதுவாக செல்கிறது. நாடோடிகள் குரூப் படத்தில் வரும்போது படத்தின் விறுவிறுப்பு அதிகமாகிறது அனால் வந்த வேகத்தில் அப்படியே சென்றுவிட்டனர்.
மொத்தத்தில் வெற்றிவேல் :
படம் ஒரு குடும்ப படமாக அமைந்துள்ளது. சசிகுமார் பிரியர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். படம் ஒரு முறை நண்பர்களுடம், குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு நன்றாக உள்ளது.
THERI MOVIE RATING – 3 / 5