அஜித், சிவா கூட்டனியுல் உருவாகும் அடுத்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது இது அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
காமெடி வேடத்தில் சந்தானம் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது.
இப்படத்தின் வில்லன் வேடம் மிக பவர்புல்லான வேடம் என்பதால் விஜய் சேதுபதி ஓகே சொல்லிவிட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் கருணாகரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.