Anitha Sampath Instagram – என்னது! இன்னும் உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகலயா..? எவ்வளவு பவுன் சேத்துவச்சி இருக்கிங்க???இன்னுமா உங்க பொண்ணுக்கு கொழந்த பொறக்கல??! என பெண்ணுக்கான அதிகபட்ச சாதனையே காலாகாலத்தில் கல்யாணம் செய்வதும்..நிறைய சீர் கொண்டு செல்வதும்.. குழந்தை பெற்று அதை வளர்ப்பதும்..சுவையாக சமைக்க தெரிந்திருப்பதும் தான்..என இன்னமும் சிலர் எண்ணிக்கொண்டு இருக்கும் காலத்தில்…இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த 20 வயது தங்க மங்கை அவர்களுக்கெல்லாம் ஒரு பாடம்.. .
துப்பாக்கி சுடுதலில் 2018 மற்றும் 2019ல் மொத்தம் 5 தங்கம் வென்று அசத்திய சாதனை மங்கை இளவேனில் வாலறிவனுடன்…அவரது முதல் வீடியோ நேர்காணலை நாங்கள் தொகுத்து வழங்கினோம் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும்..
.
மேலும் சிறக்க வாழ்த்துகள் இளவேனில்.. @elavenil.valarivan | Posted on 27/Dec/2019 12:09:45