Anitha Sampath Instagram – முழுதாக படித்தால் மகிழ்வேன்..
.
காதல் தோல்வி எனில்..அந்த ஆண் வாழ்விலேயே தோல்வியுற்றவனாக இருந்துவிட வேண்டும்..அந்த பெண்ணையே நினைத்து எதிர்காலத்தை இழந்து தேவதாசாக வாழ்ந்து மடிய வேண்டும்..இல்லையேல் தன்னை நிராகரித்தவளை பழிவாங்க வேண்டும்..இப்படி மட்டுமே காதல் தோல்வி திரைப்படங்களை பெரும்பாலான தமிழ்சினிமாக்களில் பார்த்து வந்தவர்களுக்கு திரு.விக்ரமன் அவர்களது படங்கள் ஒரு வாழ்க்கை பாடம்…. காதல் தோல்விக்கு புது இலக்கணம் படைத்து..துவண்ட இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை மலரும் விதத்தில் அடுத்த தலைமுறை படங்களை கொடுத்தவர்.
.
தோல்வி காதலுக்கு மட்டும் தான்..வாழ்க்கைக்கு இல்லை..நீ தேடும் வகையிலான வாழ்விணை நிச்சயம் உன்னை அடைவாள்..என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு ஊட்டியது இவர் படங்கள்.. சூரிய வம்சம்,உன்னை நினைத்து போன்ற படங்கள் அதற்கு சான்று..
.
நிராகரித்த பெண்ணை பல வருடங்கள் கழித்து சந்திக்க நேர்ந்தாலும் எந்த சலனமும் இன்றி மீண்டும் அவளுக்கு உதவி செய்யும் உயரிய பண்புகள் இவர் பட நாயகன் மூலம் வெளிப்பட்டது.. பூவே உனக்காக போன்ற படங்களில்..கிடைக்காத காதலியை பழி வாங்காமல் அவள் வாழ்க்கை சிறக்க நினைக்கும் ஒருவன்.. .
.
ஆணும் பெண்ணும் பழகினாலே பஞ்சும் நெருப்பும் பத்திக்கும் என்று கூறி வந்த காலக்கட்டத்தில் புது வசந்தம் திரைப்படத்தில் 4ஆண்கள் ஒரு பெண் தோழி என்ற கதைக்களம்..கடைசி வரை ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்பதை விளக்கியது அந்த நெக்ஸ்ட் ஜென் காவியம்.. .
பிரியமான தோழி படத்திலும் ஆணுக்கு காதலி வேறு தோழி வேறு..ஆண்கள் பழகும் எல்லா பெண்களையும் தவறாக பார்ப்பதில்லை..உண்மை நட்பும் உள்ளது என்பதை உணர்த்தியது.. .
நாம் கொண்டாடும் அஜித் விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் மைல்கற்கள் அனைத்தும் இவர் படமே.. தயாரிப்பாளர் 10 கோடிக்கு படம் பண்ண சொன்னால்..30 கோடிக்கு இழுத்துவிடுவார்கள் இயக்குனர்கள்..
இவரிடம் 10 கோடி கொடுத்தால் 8 கோடியில் படத்தை முடித்து..அதை மெகா ஹிட்டாகவும் மாற்றி அனைவரையும் லாபமடைய செய்யும் மந்திர இயக்குனர்.. இவர் படங்கள் “காலத்தை வென்றவை..”.. காலத்தால் அழியாதவை..
.
இனி வரப்போகும் 5,6,7ஆம் தலைமுறையும் விருப்பும் படங்கள் அவை.. குறிப்பாக 90s kidsன் நினைவுகளில் பசு மரத்து ஆணி போல பதிந்தவை..ரோசா பூ சின்ன ரோசா பூ என குழந்தையாக நாம் பாடிக்கொண்டிருந்த நினைவுகளை எல்லாம் மறக்க முடியுமா!!!!
.
உங்கள் அடுத்த படத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் விக்ரமன் சார்..❤️ | Posted on 22/Dec/2019 13:02:46