Dear Mr.@mohanlal I liked you from your first film. I envied you for the constant quality of your work, that too with detractors lurking in every turn. I liked you even more when I worked with you. Long live my younger brother.
Then, he created a storm by talking with a bloodstained shirt. Now, he has made his state the object of adulation in the country. The CM of Kerala emphasised our bond, calling us brothers, keeping the borders open. Our Heartfelt birthday wishes to our comrade @pinarayivijayan
We all agree on 2 things with you Mr. Prime Minister.
The poor are suffering the most in this crisis and being self reliant is the future.
While we welcome the economic package, I will watch out for the details to see how the poorest of my country get their due at last.
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.
மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும் மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்.
உழைப்பவர்கள் பசித்திருக்கக் கூடாது என்கின்ற “எம் எண்ணத்தை” செயலாக்கி தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அன்று தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் எளியோர்க்கு உதவி பொருட்கள் வழங்கிய மக்கள் நீதி மய்யத்தின் கள வீரர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அலாதி அன்பிருந்தால், அனாதை யாருமில்லை.
Everyone knows the humongous work by Dr.V.Shantha and the Adyar Cancer institute towards treating the cancer patients.
In this Pandemic time, they are in urgent need of funds to continue their services.
Let us all contribute, whatever one can. Spread the word for a just cause.
Everyone knows the humongous work by Dr.V.Shantha and the Adyar Cancer institute towards treating the cancer patients.
In this Pandemic time, they are in urgent need of funds to continue their services.
Let us all contribute, whatever one can. Spread the word for a just cause.
முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ஆம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமாதமிழகம்
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,
சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்
20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம்
தமிழக அரசு.
எங்கும் வருவோம் உமைத் தடுக்க.
மக்கள் நீதியே வெல்லும். #வெல்லும்தமிழகம்
My beloved People of Thamizh Nadu #தாங்குமாதமிழகம்
தமிழர்களுக்கு ஒரு கடிதம். #தாங்குமாதமிழகம்?
உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.
உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.
மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்
ஊரடங்கை சாதகமாக்கி காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு மற்றும் மின்சார சட்ட திருத்த வரைவை மாற்றிய மத்திய அரசு, மாணவர்களுக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தன்னிச்சையாக அமல்படுத்துவது, தலைக்கனம் தவிர வேறென்ன. இத்தகைய கனம் பொருந்தியவர்கள் மக்கள் தீர்ப்பால் தவிடு பொடியானதே வரலாறு.
மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
தொற்று அதிகம் இருந்த ஈரோடு மாவட்டத்தை தொற்றில்லாது மாற்றி இருக்கும் ஆட்சியர் கதிரவனுக்கும், S.P. சக்திகணேசனுக்கும், மருத்துவ, தூய்மை பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் என் பாராட்டுக்கள். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் செய்ததை மாநிலம் முழுதும் செய்ய வேண்டாமா? அரசு முனைந்தால் முடியும்.
Yashoda, a short film by @sripriyarajkumar together with @kameelanasser and @shivakumarr20 is shot on mobile. Edited by Reuben with BGM by Krish and sung by Nritya Pillai, it is an interesting attempt. I am happy to release the first look of “Yashodha” and look forward to seeing it.
உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா தொற்று சமயத்தில், சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் கேன்சர் நோயாளிகளுக்கு, இலவச மளிகைப் பொருட்களை அவரவர் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் #Sankalpbeautifulworld நாம் ஆதரவு அளிக்க வேண்டிய முயற்சி. பிறர்க்கு உதவுபவர்க்கு உதவுவோம்.