Dear @mahi7781 Thank you for demonstrating how self-belief can help achieve in sports and life. Rising from a small town to being the hero of the nation, your calculated risks and calm demeanour will be missed by Team India. Glad that your love story with Chennai continues
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். @ispbofficial தொரகா ரண்டி அன்னைய்யா 🙏
நேர்மையின் அடையாளமாம் கக்கன் அய்யா அவர்களின் பெரும் ரசிகர் என் தகப்பனார் திரு. D. ஸ்ரீனிவாசன்.
அவரின் பேத்தி திருமிகு. ராஜேஸ்வரி அவர்கள் தமிழக டி.ஐ.ஜி ஆகப் பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடுமபத்திற்கு கிடைத்த பெருமையும் கூட. நாளை நமதாகட்டும்
பகுத்து அறிந்த பின்,
பண்பிழப்பது எவ்வாறு?
We both share a similar concern for the welfare of the common man and have the firm belief that, in a democracy the Governance is FOR the people.
May you live long to serve our people for many years to come. @arvindkejriwal
74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். கொரோனா தொற்றிலிருந்தும், பசி, வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்தும், நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்.
வளமான வாழ்க்கை அனைவருக்கும் என்ற நம் கனவு நனவாகட்டும்.
ஜெய்ஹிந்த்.
நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம்.
நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக…
உங்கள் நான்.
வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்.
காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது.
மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?
என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான AVM தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை திரு AV.மெய்யப்பன் அவர்களின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். @ProductionsAvm
ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி.
இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான்.
மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.
மாணவ கண்மணிகாள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.
பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை.
வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது.
Glad that Education is getting 6% share of GDP in the new education policy. The Immediate focus and reforms needed are in the Healthcare sector now, which gets only 1% of GDP on an average. This share has to be increased to 7-8% if we want to grow as a healthy Nation too.
ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல்,தனக்கான பொறுப்பாக பார்த்தவர்.
மக்களின் தேவைகளையும், வலிகளையும் அறிந்து செயலாற்றுவதே முக்கியம் என நடைமுறையில் செயல்படுத்தியவர் கர்மவீரர் நம் காமராஜர்.
அவர்தம் பிறந்த நாளில் இன்று போல் என்றும் மக்கள் நலனை முதன்மையாய் வைத்திடுவோம் என உறுதியேற்போம்.
Remembering Nobel laureate Rabindranath Tagore on 79th death anniversary with his poem “Deeno Dan”, written 120 years back but sounding more relevant today.
தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம்.
இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல.
பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.
ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை.
அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.
இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.
வாழிய பாரத மணித் திருநாடு.
Congratulations to my friend and senior journalist Dr.Malini Parthasarathi @malinip for becoming the Chairperson of the Hindu group of publications.
You have broken another glass ceiling and am sure your leadership will guide the Hindu group to greater heights.
தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.
சமூகநீதி காத்திட தாமதமோ, மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும்.
நம்மை மேம்படுத்திடவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் நினைவுறுத்துவோம்.
திறனறிந்து அதை வளர்த்திடுவோம் என்று சொல்ல இதைவிட சிறந்த நேரமில்லை.
கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண். கைகளில் வண்ணம் செய்யும் அவர்களைக் கைவிடாது காத்தல் நம் கடமை மட்டுமல்ல, நம் பெருமையும் கூட. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கைத்தறி பொருட்களை பயன்படுத்துதல் தான் அக்கலை காக்கப்பட,இந்த தேசிய கைத்தறி தினத்தில் நம் கடமை. நாமே தீர்வு.
புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது.
மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது.
அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம்.
புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு, அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களைக் காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது.
அரசின் உதவியும் அவசியம்.