Happy to launch the Title Teaser of my film today; directed by @lokesh.kanagaraj . Enjoy!
#ஆரம்பிச்சிடலாங்களா
#என்வீரமேவாகையேசூடும்
#vikram
@rkfioffl @anirudhofficial
வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின் சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம்.
என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பிறந்த நாளை ‘நற்பணி’ தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன்.
உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள ‘உள்ளும் புறமும்’ சீரமைப்பேன்.
அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்.
தேடித் தீர்ப்போம் வா…..
தேடித் தீர்ப்போம் வா…..
My heartfelt thanks to my fans, family & friends, political leaders & film industry colleagues across India for your lovely birthday wishes. Special thanks to my friends who are experts in various walks of life and to the media houses. Your birthday wishes mean a lot to me.
My eyes well up with the wishes of my @maiamofficial brothers & sisters – I thank them for converting my birthday into a “people’s welfare day” & rendering many a service to society. Continue your good work.
I promise I will strive to become more worthy of all your love and goodness, every single day.
We shall celebrate my next birthday at Fort St. George.
ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்
#iWillCHANGE_iWillVOTE
#என்ஓட்டு_என்பெருமை
Happy Bday to Mr. MK Gandhi. Sharing what @aksharaa.haasan had sung for me when she was a child. Calling all Indians to remember the great man whose life was his message to us! Let’s make India a place where Equality prevails-sare jahan se achcha, Gandhi’s India can still be ours!
பாருக்குள்ளே நல்ல நாடுதான்…
நம்பியதில் பிசகில்லை.
நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால்,
நாளைய குழந்தைகளேனும் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டும்.
ஜெய்ஹிந்த்!
புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.
உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா?
பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?
என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்;
அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும்.
ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.
தற்காலத் தமிழகராதி உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பதிப்பித்து, தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் இயற்கை எய்திவிட்டார். தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்.
பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.
விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார்.
விலையிறங்குவாயா வெங்காயமே?
தேர்விலேயே ஆள் மாறாட்டம்,
முடிவுகளில் முழுக் குழப்பம்.
இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,
உள் ஒதுக்கீடும் துறப்பு.
கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா?
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.
தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்.
நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது.
மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது.
சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம்.
உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது.
நினைவிருக்கட்டும்…
நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்.
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா.
மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே.
நான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராடினர் நம் அரசு மருத்துவர்கள். அனைத்துத் தரப்பும் நியாயம் என்று ஒப்புக் கொண்ட போன வருடப் போராட்டம் அது.
செயலாளர் பேச்சுவார்த்தை, அமைச்சர் வாக்குறுதி என்று நீண்ட நாடகம், ‘தாயுள்ளத்தோடு முதல்வர் அளித்த உறுதி’ என்னும் க்ளைமாக்ஸோடு முடிந்தது.
இடையில் வந்த பெருந்தொற்றில் போராட்டத்தை மறந்து, உயிரையும் பணயம் வைத்து மக்களையும், அரசின் மானத்தையும் காத்தனர் அரசு மருத்துவர்கள்.
ஒரு வருடம் ஆகியும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கலங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான்.
அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம்.
இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம்.
வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்.
மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்.
அரசின் கடமைகளைச் சுட்டிக் காட்ட மக்கள் நீதி மய்யம் என்றுமே தயங்கியதில்லை.
கிராம சபைகளைக் கூட்ட வேண்டியதன் அவசியத்தை தமிழ்நாடு அரசிற்கு அறிவுறுத்த சென்னை உயர்நீதி மன்றத்தை மக்கள் நீதி மய்யம் அணுகியுள்ளது.
மக்கள் நலனுக்காக என்றும் குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்.
‘தகவல் அறியும் உரிமை’ கிடைத்த போது, அது ஆட்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்கும் கேடயம் என்று மகிழ்ந்தோம். சமயத்தில் தட்டிக்கேட்க உதவும் ஆயுதம் என்றும் இருந்தோம். ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் தகவல் தரும் அமைப்பே தவறு என்று புரிந்தது.
அதை உருவாக்கியவர் யாரென்றே தெரியாதென அதிகாரவர்க்கமே கைவிரித்தது. மறுநாளே அரசின் அறிக்கை அதை மறுத்தது. ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது.
சத்யமேவ ஜெயதே என முழங்கும் நாட்டில் சாதாரண உண்மையை அறிந்து கொள்ளக்கூட எங்கே போவது? சேது விவகாரத்தில் இத்தனைக்குளறுபடிகள் ஏன்? யாரிடம் தகவல் கேட்பது?
தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
2.2 லட்சம் கோரிக்கைகள் இன்றும் மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன.
வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும்.
ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையினைப் பெறத் தெளிந்தால்,நாமே தீர்வு.
நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்.
எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்.
இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.
ஐயா ஆட்சியாளர்களே…
தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து.
அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல.
மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.
ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது.
கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை.
கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை.
குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல்
கடைக்கண்ணாவது வையுங்கள்.
திருவாசகச் சொல்லகராதி, திருக்கோவையார் சொல்லகராதி உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதிய தமிழறிஞர் இராம. இருசுப்பிள்ளை காலமான செய்தி அறிந்தேன். தமிழ் முனிவராக வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றிய இருசுப்பிள்ளையின் பெயர் வரலாற்றில் நிலைக்கட்டும்.
ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது.
நாளை நமதே!