முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙂
இதுவரை ஓட்டுக்களை “வாங்க” வந்த அரசியல்வாதிகளைத்தான் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் மக்கள். செல்லும் இடமெல்லாம் மாற்றத்தை விரும்பும் மக்கள் வெள்ளம் கரைபுரள்கிறது. நமது வாகனம் படகாகிறது.
#சீரமைப்போம்_தமிழகத்தை

புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல;என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்.
#எதுவும்_தடையல்ல
காஞ்சிபுரம் நெசவாளர்கள் உலகைத் தங்கள் கலையால் ஈர்த்தவர்கள். ஜி.எஸ்.டி, கொரானா என அடுத்தடுத்து விழுந்த அடிகளால் அவர்கள் வாழ்வு நசிந்துவிட்டது. உரிய நிவாரணமும், தொழில் சிறக்க ஊக்கமும் உடனே அளிக்கப்பட வேண்டும். #சீரமைப்போம்_தமிழகத்தை

கூடிக் கலையும் கும்பல் அல்ல. கூட்டி வரப்பட்ட கூட்டமும் அல்ல. இது சரித்திரம் படைக்கத் துணிந்தவர்களின் சங்கமம். நாமே தீர்வு எனும் முழக்கம் எம் சங்கநாதம்.
புதியதோர் புதுவை செய்வோம்!
ஊர்க் கிணறு புனரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிணறுகளைச் சீரமைத்திருக்கிறார்கள். நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஊர்க் கிணறு புனரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிணறுகளைச் சீரமைத்திருக்கிறார்கள். நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்?
#நான்_கேட்பேன்
ஜெகஜீவன் அவென்யூவில் ஜீவநாடியான நீர்நிலைகளும், ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழும் கடற்கரைப் பகுதிகளும் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்த உரையுடன் எனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டேன். #ஆயிரம்_கைகள்_கூடட்டும் #சீரமைப்போம்_தமிழகத்தை
ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’
எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு.
சம நீதியும், சமூக நீதியும் இல்லாத ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி!
#சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல
நாப்பிளக்க வாய்ச்சழக்கு
பேசுகின்ற தலைவர்காள்
மக்கள் நீதி மலரும் போது
எந்தப் பக்கம் ஓடுவீர்?!
#இனி_நாம்
இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும்போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை.
இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு. #சீரமைப்போம்_தமிழகத்தை #இனி_தடையல்ல
உண்ணவும் அருந்தவும் கொடுத்து ஊர்திகளில் அழைத்தாலும் வராத கூட்டம், ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? அதனால்தான் செஞ்சியில் பேச நமக்குத் தடைகள் வருகிறதோ? எது வரினும் நில்லோம், அஞ்சோம்.
#இனி_நாம்
தமிழகத்தின் பொருளியலைச் சீரமைத்து டிரில்லியன் எக்கனாமி எனும் இலக்கை நோக்கிய எமது செயல்திட்டத்தின் 7 முக்கியமான சிறப்பம்சங்களை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அறிவித்தேன். #சீரமைப்போம்_தமிழகத்தை #இனி_நாம்
ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர். வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது. சீரமைக்க வேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது. #சீரமைப்போம்_தமிழகத்தை
#எதுவும்_தடையல்ல
கர்மவீரரின் ஊரில், கட்டுக்கடங்கா உற்சாகத்தோடு மக்கள் கூட்டம்; மத்தாப்புப் புன்னகைகளை சிவகாசியிலும், மிட்டாய் இனிமையை கோவில்பட்டிக் காற்றிலும் உணர்ந்தேன். தம் வீட்டு வாசல்களில் நின்று வெற்றி உமதே என குரலெழுப்பும் மாதர்களிடம் சொன்னேன் ‘வெற்றி நமதே’ #சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல
மீனவர்களைக் காவு வாங்கும் தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் கட்டுமானத் தவறுகளை அரசு சரி செய்து கொள்ள வேண்டும் எனும் நியாயமான கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. பார்வையிடச் சென்ற என்னை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால், ஊர்ப் பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து சென்றேன். முட்டாள்தனமான அந்தக் கட்டுமானத்தால் உயிர்கள் பலியானதை ஊரார் கண்ணீர் மல்க விளக்கினார்கள். கடலில் அழும் மீனவர்களின் குரல் மையநிலத்தில் எதிரொலிப்பதே இல்லை. எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
கூடிக் குறைவது, குறைந்து கூடுவது அன்றாட தங்க விலை. கூடிக்கொண்டு மட்டுமே போவது அத்தியாவசியமான கியாஸ் விலை.
விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ?
தமிழிலக்கியத்தின் தலைமகன் புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் ஒரு சிலை அமைக்கவேண்டும் என்பது பல தசாப்தங்களாக நீடிக்கும் கோரிக்கை. ஒரு தெருவிற்கு அவர் பெயர் வைப்பதற்கே 72 ஆண்டுகள் இவர்களுக்குத் தேவைப்பட்டது. எங்கள் ஆட்சியில் புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
#சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல