“Virumandi”, a movie close to my heart which made me endure and push a lot of boundaries and I most definitely enjoyed the process of doing so.
A special poster created by art director Ilayaraja now available on
https://ikamalhaasan.com/event/ (link in bio )
@kh_thestylemanifest – is an idea born while Mr Kamal Haasan and I , @amritha.ram his stylist, were having a discussion between shots during our film shoot. It is a page that is dedicated to decoding the looks and stories behind each one of them with The Legend himself! It is gratifying to see the response of his fans and enjoyment they derive from knowing the BTS of each style. And now we have received a lot of fan requests as to where this poster can be downloaded from for their collections.
This particular poster was created by award winning art director , @artilayaraja as a tribute to Mr Kamal Haasan. Mr Ilayaraja accepted to do a poster for Virumandi as soon as I asked him!!! He created this amazing poster using digital art technique.
For all the Ulaganayagan fans who have messaged asking for the poster can now visit @ikamalhaasan page to follow the instructions and download the High res image of it for your personal collections !
Stay tuned for more amazing looks and memories coming up on this page !
தொ. பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன்.
இது ட்வீட்டில் அடங்காத் துயரம்.
Watch me LIVE on a video interaction with @arrahman on June 11, 2020 at 17:00 hrs IST.
#KnowMoreAboutTheLeader
#Thalaivanirukindraan @turmericmedia @openpannaa
என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது. உங்களின் ஒத்துழைப்பும், மக்களின் பங்களிப்பும் இருந்து விட்டால் எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வு எளிதாகும். இந்த சிக்கலான தருணத்திலும் நாமே தீர்வு என்ற இந்த சிந்தனையின் செயல் தொடக்கம். இன்று மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளை தேடும் தன்னார்வலராக பதிவு செய்யவும், 63 – 69- 81- 11- 11 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
நாற்பதாண்டுகளுக்கு முன்னரே துவங்கிய நற்பணிகளுக்கான ஊக்கம் மக்கள் திலகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டது. நாளை நமதே எனும் எமது ஆப்த வாக்கியம் அவர் ஈந்தது. ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி. நாம் அதைச் செய்வோம். #இனி_நாம்
Post – Covid Scenario on “The New ”
with
Ms.K.K. Shailaja Teacher (honourable health minister of kerala
Dr.Ramanan Laxminarayan -Founder & director – center for disease Dynamics.
Dr.Shalini – Writer and Psychiatrist
காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு. சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்.
Mr @arrahman and I are coming together on an Instagram chat on the 12th June at 5pm to converse on music, movies and all things that matter to us ! @rkfioffl @turmericmedia @deepak30000 @banijayasia @openpannaa #ThalaivanIrukkindraan
அருகமர்ந்த ஆசிரியருக்கு அஞ்சலி…..
#நாமேதீர்வு
#NaameTheervu
#நாமேதீர்வு
#NaameTheervu
பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்.
பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்தி அடிப்படைவாதம் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாகத் தமிழகத்தை மாற்றிய பெரியாரின் நினைவுகளை அசை போடுகிறேன். பெரியார் அன்றும் இன்றும் என்றும் தேவையாக இருக்கிறார்.
தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் ஒவ்வொரு பூத்திலும் நம்மவரின் நல்லவர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் சென்று, வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற வழி காட்டியிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உதவியிருக்கிறார்கள். எம்மவரின் இச்செயல், நீண்ட பயணத்தின் முன்னோட்டம். வரவிருக்கும் வெற்றிகளின் வெள்ளோட்டம். நம்
அன்பு இளைஞர் படையின் வீரர்களை ஆரத் தழுவுகிறேன்.
உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை
ரத்தத்தில் உண்டே உதவுமனம் – எத்தனையோ
பத்தாண்டு காலமாய் நற்பணிகள் செய்துவரும்
வித்தன்றோ எந்தன் படை!
பேரிடர் உதவிப் பணியில் இறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யப் படையணிக்கு வாழ்த்துகள்.
பல தலைமுறைகளுடன் தொடர்புள்ள புதிய தலைமுறைக்கு பத்து வயது.
பல்லாண்டு தலைமுறை தழைக்க வாழ்த்துக்கள்.@puthiyathalaimuraitv
சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் அன்பு அனைவருக்கும் கிடைத்து, மகிழ்வுடன் கூடி வாழும் ஒரு நாடாவோம். இந்தியர் என இணைவோம். அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
எந்த பதவியும் நாடாமல், நற்பணிக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம். நம் மய்யத்தின் அடிநாதம். கொரோனா கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின் உறவுகளுக்கு நம் அன்பும், அனுதாபங்களும். நற்சேவை நாயகா…நன்றி.
சட்டவிசாரணை சரியாக நடந்ததா என்கிற சந்தேகத்துடனேயே பேரறிவாளனின் 30 ஆண்டு சிறைவாசம் முடியாமல் தொடர்கிறது. சட்ட, நீதி மன்றங்கள் கருத்தைக் கூறிவிட்டன. கவர்னர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது?
பரவாயில்லை, தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள். பேரறிவாளனை விடுவியுங்கள்.
சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும், வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது.
விலை உயர்வு, தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே.
தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது.
அரசே விழித்தெழு, அல்லேல் விலகி விடு.
On this International Cancer Survivors Day, I wish all the survivors of cancer and their families more strength and courage. You people are living examples that this can be fought and won. Thank you for being a source of hope and strength for people fighting against Cancer.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இளைஞர்களே! நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்!
நாமே தீர்வாக மாறுவோம். #நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை…
Call 6369811111
கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம். தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களே… வாருங்கள், பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அமைவோம்!
#நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை…
Call 6369811111
தெய்வம் நின்று கொல்லும்…
பயம் இன்றே கொல்லும்! கொரோனா வந்தால் இறப்புதான் என்று பயந்தே செத்து கொண்டிருப்பவர்கள் அதிகம். மருத்துவர்களே! சிறிது நேரம் ஒதுக்கினால், பலர் பயமின்றி வாழ உதவலாம்! நாமே தீர்வாக மாறுவோம்.
#நாமேதீர்வு
#Naame Theervu
இணைந்து மீட்போம் சென்னையை…
Call 6369811111