சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா?
#நான்_கேட்பேன்
#நேர்மை_திறமை_அஞ்சாமை
@maiamofficial
To my dearest Yusuf Khan Saheb / Shri. DIlip Kumar Ji My salute to one of the greatest living Indian artistes in Cinema. Happy birthday sir and
I place my gratitude for setting a benchmark half a century ago, for today’s artistes to follow.
நம் தேசத்தின் எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் கொடிநாள் நிதியாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ரூ.1,00,000/- காசோலை வழங்கினேன். #வீரரைப்_ போற்றுதும்_விவசாயியைப்_போற்றுதும்.
பொங்கும் புது வெள்ளத்திற்குச் சிறுமடைகள் தடை ஆகாது.
பாதை பழசு.
பயணம் புதிது.
வெற்றி நமதே! #எதுவும்_தடையல்ல
உலகத் தரமான திரைப்படங்களை ஈந்து சினிமா ரசனையை மேம்படுத்திய திரை மேதை கிம் கி டுக் மரணம் மீப்பெரும் இழப்பு. மாமேதைக்கு அஞ்சலி.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் @maiamofficial இன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நமது ஆதரவினைத் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
#நான்_கேட்பேன்
#உழவே_தலை_உழவனை_நினை
@_yogendrayadav
புத்தக வாசிப்பு அருகி வரும் சூழலில், ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து, சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் முழுநேர நூலகத்தின் நூலகர்களுக்கும், வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
காசுக்காகக் கூடுவது கும்பல்;
லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி! மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும்,அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
# எதுவும்_ தடையல்ல. #சீரமைப்போம்_தமிழகத்தை
விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கையை ஏற்று, இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் குரலுக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் @maiamofficial டிசம்பர் 8ம் தேதி நடக்கவிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும்.
ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/-
பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?
ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்குண்மை தெரிந்தது சொல்வேன் என்று முழங்கிய பாரதி, வாழ்நாளெல்லாம் நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் உண்மையைப் பாடினான். என் நெஞ்சில் நின்று வழிகாட்டும் அந்த முன்னோனுக்கு என் முதல் வணக்கம். Kodambakkam Bridge
தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான புறச்சூழல் புதர் மண்டிக் கிடக்கிறது; இந்தக் காட்டைத் திருத்தும் முன்னத்தி ஏராக மக்கள் நீதி மய்யம் இருக்கும். “கமிஷன் அரசாங்கத்தை” துரத்தி விட்டு “mission அரசாங்கம்” அமைக்க தொழில்முனைவோர் கரம் கோர்க்கவேண்டும்.
#சீரமைப்போம்_தமிழகத்தை
இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை. அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும்.
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.
வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.
திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?
தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்.
ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.
ஆன்லைன் வகுப்பிற்கு திறன்பேசி வாங்க வசதியற்ற ஏழை மாணவர்களுக்காக, “ஹெல்ப் சென்னை” அமைப்பைத் தொடங்கி பயன்படுத்தப்பட்ட திறன்பேசிகளை தானமாகப் பெற்று 400 மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய அர்ஷிதா அகர்வால், குனிஷா அகர்வால் இருவரையும் பாராட்டுகிறேன்.
குஜராத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியைத் தொடங்கி வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட வர்கீஸ் குரியனின் சாதனையை ‘நிஜ குஜராத் மாடல்’எனலாம். பால் உற்பத்தியில் இந்தியாவை உலக முதன்மை பெறச் செய்தவரின் 99 வது பிறந்த நாளில் அவரை அன்பால் நினைவு கூர்கிறேன்.
கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்?
முந்நீர் சூழ் உலகு என்பார்கள். மழைநீர், ஆற்றுநீர், சாக்கடை என்று இப்போது தமிழகம் முழுதும் சூழ்ந்திருக்கும் நீர் பெருமைக்குரியது அல்ல. கோவிட் தொற்றுக்காலத்தில் இது பீதிக்குரியது. உள்ளாட்சி நிர்வாகத்தின் உறக்கத்தைக் குறிப்பது. கோடீஸ்வரப் பகுதிகளைப் போல், குப்பத்துப் பகுதிகளும் சுகாதாரமாக இருக்க, அரசு என்ன செய்யப்போகிறது?
அம்பேத்கர் தலைமையில் அறிஞர்கள் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 72வது ஆண்டு இது. பல நாடுகளின் கோட்பாடுகளைத் தனதாக்கிய இந்தியா, பொதுவுடைமை, மதச் சார்பின்மை, நேர்மை ஆகிய தன் அடிப்படைக் கொள்கைகளில் இனி பொலிய வேண்டும்.
மழைக்காலத்திற்கென திட்டமிட்டிருந்தால், ஆபத்தான கால்வாயென எச்சரிக்கை வைத்திருந்தால், சாலையில் விளக்கு எரிந்திருந்தால், மருத்துவர் கரோலின் பிரிசில்லாவையும் மகள் எல்வினையும் இழந்திருக்க மாட்டோம். கையாலாகாத அரசு எத்தனை உயிர்களைக் காவு வாங்குமோ?
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும்.
பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் தன் பங்களிப்பை மத்திய அரசு குறைக்கக் கூடாது. மாநில அரசு கோரும் தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டும். சமூகநீதியை நோக்கிய பாதையில் சிறு விலகலும் அனுமதிக்க முடியாதது.