அரசியல் செய்து பிழைக்க வரவில்லை. அன்பு மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறேன். என் மீத வாழ்நாள் தமிழுக்கும் தமிழர்க்கும் உரியது.
அடிப்படை வசதிகளுக்கே அல்லாடுகிறார்கள் அம்மன்குளம் மக்கள். அவர்கள் கோரிக்கைக்கு காது கொடுக்கவும் நாதி இல்லை. களத்தில் இறங்கி விட்டேன். பிரச்சனைகளைத் தீர்க்காமல் ஓய மாட்டேன். #தேடிதீர்ப்போம்வா
ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்து தன் பதவியை ராஜினாமா செய்த நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு வேளச்சேரி தொகுதியின் வெற்றி வேட்பாளர். அவரை வெற்றி பெறச் செய்வது வேளச்சேரி தொகுதி மக்களின் கடமை. பெருமை.
அன்பும் பண்பும் மிக்க கோவையை சமூக நல்லிணக்கத்திற்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் நகரமாக மாற்றுவேன். வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு.
கோவை தெற்குத் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத பிரச்சனைகளை உடனடியாகத் தீர்ப்பேன். வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு.
திருவண்ணாமலை தொகுதியின் வெற்றி வேட்பாளர் இரா. அருள். இன்னமும் பின்தங்கிய தொகுதியாகவே அறியப்படும் திருவண்ணாமலையை தமிழகமே திரும்பிப் பார்க்கச் செய்யும் எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ளார். நேர்மை, திறமை, அஞ்சாமை கொண்ட இரா. அருளுக்கு வெற்றியைப் பரிசளியுங்கள்.
அக்கறையற்ற அரசுகளால் நசிந்து போன கோவையின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மீட்டெடுப்பேன். வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன். வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு.
மேதகு அப்துல்கலாமின் ஆலோசகராகப் பல்லாண்டு பயணித்த பொன்ராஜ் அண்ணா நகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர்.வறுமையை ஒழிக்க 15 மாநில முதல்வர்களுக்கு செயல்திட்டம் வகுத்துக்கொடுத்தவர்.தன் அறிவாலும் அனுபவத்தாலும் அண்ணாநகர் தொகுதியை வளம் கொழிக்கச் செய்ய துடிப்புடன் இருக்கிறார்.அவரை ஆதரியுங்கள்.
எக்மோர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் பிரியதர்ஷிணி. வழக்கறிஞரான இவர் பேரிடர் காலங்களில் ஆற்றிய சேவைகள் போற்றுதலுக்குரியவை. எக்மோர் தொகுதியை மேம்படுத்தவும், வறியோர் வாழ்வு மேம்படவும் இவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
திண்டுக்கல் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ராஜேந்திரன். திண்டுக்கல் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வேட்கை கொண்டவர். இவரை வெற்றி பெறச் செய்யும்படி திண்டுக்கல் தொகுதி மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனைக்கும் முதல் குரலாய் ஓங்கி ஒலிக்கும் சென்னை தமிழச்சி பத்மப்ரியா மதுரவாயல் தொகுதியின் வெற்றி வேட்பாளர். மிக இளம் வயதிலேயே மக்கள் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பத்மபிரியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென மதுரவாயல் தொகுதி மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
காரைக்குடிக்கு குடிநீர் வேண்டுமென பட்டினிப் போராட்டம் நடத்திய பழ.கருப்பையா தியாகராய நகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர்.ஜெயலலிதாவின் ஊழலைக் கண்டித்து தன் எம்.எல்.ஏ பதவியை உதறிவிட்டு வந்த கொள்கைப் பற்றாளர். வாழும் காந்தியரான பழ. கருப்பையாவிற்கு தி.நகர் மக்கள் வாக்களிக்கவேண்டுகிறேன்.
ஆர்.கே. நகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஃபாஸில். மக்களுக்கான நற்பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். கோவிட் கால போராளி என்று ஊடகங்களால் போற்றப்பட்டவர். ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு இவரைப் பெருமையுடன் பரிசளிக்கிறேன். வாக்களித்து கோட்டைக்கு அனுப்புங்கள்.
திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் வீரசக்தி. ஃபார்மா துறையில் நெடிய அனுபவம் மிக்கவர். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பொதுத்தொண்டு செய்பவர். உடல் உறுப்பு தானம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியவர். இவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
Food Bank India அமைப்பினைத் துவங்கி ஆதரவற்றோரின் பசிப்பிணி போக்கும் சினேகா மோகன்தாஸ் சைதாப்பேட்டை தொகுதியின் வெற்றி வேட்பாளர். இந்த முன்னுதாரணப் பெண்ணை சட்டசபைக்கு அனுப்ப டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
ரமேஷ் கொண்டல்சாமி மாதவரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர். பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகித்த அனுபவம் கொண்டவர். விருப்ப ஓய்வு பெற்று மக்கள் பணி செய்யவந்திருக்கிறார். நேர்மையின் துணையோடு வந்திருக்கும் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
மக்கள் மருத்துவர், முன்னோடி விவசாயி, நேர்மையான தொழிலதிபர் என பன்முகம் கொண்ட டாக்டர் ஆர். மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர். தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறமையும் கொண்ட அவரை வெற்றி பெறச் செய்யும்படி சிங்காநல்லூர் தொகுதி மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தனது வேலையை உதறிவிட்டு மக்கள் சேவையாற்ற வந்த செந்தில் ஆறுமுகம் பல்லாவரம் தொகுதியின் வேட்பாளர். சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மூலமாக ஊழலையும் லஞ்சத்தையும் தட்டிக் கேட்பவர். பல்லாவரம் தொகுதி மேம்பட பல நல்ல திட்டங்களுடன் உழைக்கக் காத்திருக்கிறார். ஆதரவு தாருங்கள்.
தாம்பரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சிவ இளங்கோ. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், ஊழலுக்கு எதிரான சட்டப் போராட்டங்களையும் நிகழ்த்தி வருபவர். தாம்பரம் தொகுதியை தலைநிமிரச் செய்யத் தயாராக நிற்கிறார். டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
மைலாப்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீப்ரியா. தனது புகழும், செல்வமும், அனுபவமும் மக்களுக்கு நல்லது செய்ய பயன்பட வேண்டுமென களத்தில் நிற்கும் சிங்கப் பெண் ஸ்ரீப்ரியா மைலாப்பூரின் மகள். அவரது குரலை கோட்டையில் ஒலிக்கச் செய்யுங்கள்.
திருவெறும்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. M. முருகானந்தம். தன்னலமற்ற சேவைக்காக அமெரிக்கா வழங்கும் விருதினை இளம் வயதிலேயே வென்ற இந்தியர். உழைப்பால் உயர்ந்தவர். தன்னம்பிக்கைப் பேச்சாளர். திருவெறும்பூர் தொகுதியின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு வைத்திருக்கும் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
மயில்வாகனன் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கவேண்டும் எனும் கனவோடு உழைப்பவர். செய்யாறு தொகுதியை வளர்ச்சியடைச் செய்ய புதுமையான பல திட்டங்களோடு மக்கள் பணி செய்ய வந்திருக்கும் இந்த இளைஞரைப் பரிசளிக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பால் முகவர், தொழிற்சங்க செயற்பாட்டாளர் பொன்னுசாமி பெரம்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர். வெள்ளத்தில் சென்னை தத்தளித்தபோது பால்முகவர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்தவர். பலரின் உயிரைக் காத்தவர். பொன்னுசாமியை வெற்றி பெறச் செய்யுங்கள்.