We are battle ready…. Thank you for recognizing it @santanu_hazarika_art
#ஆரம்பிக்கலாங்களா
#aarambikalangala
#MNMCampaignStarts
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.
நேற்று எம்.ஜி.ஆர் தந்த ஆலந்தூர் மீன் மார்க்கெட்டில் துவங்கியது என் பிரச்சாரம். மயிலை மாங்கொல்லை வரை தொடர்ந்தது மக்கள் வெள்ளம். இன்று மாலை மடிப்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். நல்லவர்களே வருக.

மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் தமிழக மக்கள். ‘பேட்டரி டார்ச்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு களமிறங்கிவிட்டது எம்மவர் படை. தலை நிமிரட்டும் தமிழகம். வெற்றி நமதே!
சல்லிசாக மக்களை வாங்கலாம். நல்ல விலைக்கு தமிழகத்தை விற்கலாம் என மனப்பால் குடிக்கும் ஊழல் திலகங்களின் எண்ணம் ஈடேறாது என்பதை நேற்று மடிப்பாக்கத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் காட்டியது. இன்று இரவு 8 மணிக்கு கொளத்தூரில் உரையாற்றுகிறேன்.

ஞானக்கூத்தன் தமிழின் மகத்தான கவிஞர்களுள் ஒருவர். என்னுடைய ஆத்ம நண்பர்..
விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.
ஜனநாயகம் என்றால் என்ன? அதற்கு நாம் கொடுத்த விலை என்ன? நாம் இன்று ஜனநாயகத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம்? நம்மை ஆள்வோரை எப்படித் தேர்வு செய்வது? தேர்வு செய்தவர்களிடம் நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்க வேண்டும் என்றெல்லாம் விரிவான வரலாற்றுப் பின்னணியில் பேசும் ஜெயமோகன் எழுதிய ‘ஜனநாயகச் சோதனை சாலையில்’ ஒவ்வொரு தமிழரும் வாசித்தாக வேண்டிய நூல்.
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியர். இன்றும் நம் கண் முன்னால் வாழும் காந்தியர்கள். ஒரு தனி மனிதனின் செயலாற்றலின் சாத்தியம் என்ன என்று காட்டியவர் காந்தி. அந்த பேராற்றலின் வாரிசுகளில் இருவரின் கதை இது.
வரலாறு தன்னை எழுதிக்கொள்ள ஒரு மனிதனைத் தேர்வு செய்கிறதா? அல்லது தனது ஆற்றல் எதுவென அறிந்த மாமனிதன் எழுந்து வந்து எழுதுவது வரலாறா? என்றுமுள்ள சுவாரஸ்யமான அதே கேள்வி இந்த தன்வரலாற்று நூலை வாசித்தபின்னர் இன்னும் வீரியம் கொள்ளும்.
எண்பதுகளின் போர் சூழல் காரணமாக இலங்கையை விட்டு உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம். உயிர்த்திருக்க வேண்டும் எனில் ஏதேனும் ஒரு தேசத்துக்கு ஓடி விட வேண்டும். அகதிகளை கரம் கூப்பி வரவேற்கும் தேசங்கள் எண்பதுகளில் அரிது. இன்றும் அவ்வாறே.
அந்த துயரக் கடலின் ஒரு அலையே செல்வம் அருளானந்தம் எழுதிய அனுபவக் குறிப்புகளால் ஆன எழுதித் தீராப் பக்கங்கள் என்ற நூல்.
வகையில் நமது தமிழ் சினிமா மௌன யுகம் முதல் அது முளை விட்டு இன்று நாம் காணும் ஓடிடி யுகம் வரை அது வளர்ந்து நிற்பதன் பின்னணி அம்சங்களை அறிந்து கொள்ள முக்கியமான ஒரு நூல் சு. தியோடர் பாஸ்கரன் எழுதிய பாம்பின் கண்.
நம்மவர் 66 மகளிர் அணியின் பிரமாண்ட பிரச்சாரம் வியக்கும் வகையில் உள்ளது..இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், வெங்கட்ராமன், லோகநாதன் அனைவரின் முயற்சி வெற்றி கிட்ட வாழ்த்துக்கள் 🙏🙏
கட்டுரைகளில் திரு. தியோடர் பாஸ்கரன் உருவாக்கும் காட்சி அனுபவம் அலாதியானது. தலைமுறைகளைப் பாதிக்கும் அபாயம் உள்ள பல பிரச்சனைகளுக்குத் தொலைநோக்குப்பார்வையில் தீர்வுகளைத் தருகிறார்.
வயது வரம்பின்றி தமிழறிந்தோர் அனைவரும் தவறாமல் வாசித்திருக்க வேண்டிய நூல் இந்த கையிலிருக்கும் பூமி.
முப்பது வயதில் நீரிழிவு, நாற்பது வயதில் ரத்த அழுத்தம், ஐம்பது வயதில் மாரடைப்பு இவையெல்லாம் பெரும்பாலும் ருசியை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஆரோக்கியத்தை தவறவிட்ட பிழையான உணவு முறையால் என்பதை எத்தனை பேர் உணர்வோம்?
வரும் தலைமுறை இதே பிழையில் சிக்கி உடலை வாழ்வை தொலைக்காதிருக்க முதல் தேவை ஆரோக்கியமான உணவு. அதற்கான வழியைக் காட்டும் அடிப்படைக் கையேடு இந்த நூல்.
மாலையில் சிறு பசிக்கு நொறுக்ஸ் என வயிற்றுக்குள் போடும் இரண்டு நிமிட குப்பைக்கு மாற்று, அதை காட்டிலும் விலை குறைந்த ஆரோக்கியமும் சுவையும் கூடிய பனங்கற்கண்டு தூவிய சிகப்பு அரிசி அவல் என்கிறார் சிவராமன்.
பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு.
பட்டாசுத் தொழில்துறையில், பாதுகாப்புக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என்ன என்று நீதிமன்றம் சினக் கேள்வி எழுப்பி முடிப்பதற்குள் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு ஆறு பேர் பலியாகியிருக்கிறார்கள். இனியும் அரசு மௌனம்தான் காக்கப்போகிறதா?