தேடிவந்து அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் கோவை மக்களின் அன்பில் நெகிழ்கிறேன். இன்று இரவு மாம்பழ நகர் சேலத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். மண், மொழி, மக்கள் காக்க ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்.
கோவை மக்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி வேட்பு மனு தாக்கல் இனிதே நிகழ்ந்தது. கொங்கின் சங்கநாதம் கோட்டையில் முழங்கட்டும். வெற்றி நமதே!
அறியா வயதிலேயே அவையில் முந்தியிருக்கவைக்கும் அறிவைத் தந்தார் அப்பா. அவர் விழைந்தபடியே அரசியலை மனதில் வைத்து மாற்றத்துக்காக நேர்மையோடு நிற்கிறேன். இது என் தகப்பனுக்குச் செய்யும் நன்றி மாத்திரமல்ல, தாய்த் தமிழர்களுக்குச் செய்யும் நன்றி.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நல்லரசின் கடமை. எங்கள் பெண்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் விற்பனைக்கு அல்ல.
@maiamofficial @snehamohandoss
கிளைகளின் உயரம் ஊர் அறியும். வேர்களின் ஆழம் யார் அறிவார்?! குடும்பத்தைக் கொண்டாடுங்கள். உலகம் உங்களைக் கொண்டாடும்.
தொலைநோக்கு இல்லாத வடிவமைப்பு, தரமற்ற கட்டுமானம், மந்தகதியில் நடக்கும் பணிகள்.பாலம் கட்டுகிறோம் எனும் பெயரில் ஊழல் அரசு கோவை மக்களுக்கு கொடுக்கும் துன்பங்களுக்கு அளவில்லை.
“இன்றைய காந்தி” – திரு. ஜெயமோகன்
இந்தியாவின் மிக முக்கிய வரலாற்று கால கட்டம் ஒன்றின் நாயகனை, அன்றைய இந்தியாவின் சமூக பண்பாட்டு அரசியல் பின்புலத்தில் வைத்து விவாதிக்கும் நூல் ’இன்றைய காந்தி’. என்னுடைய நண்பர் ஜெயமோகன் எழுதிய இந்தப் புத்தகம் காந்தியை அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவக்கூடிய மிக முக்கியமான ஆக்கம்.
விருகம்பாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் கவிஞர் சினேகன். துடிப்பான இளைஞர். விருகம்பாக்கம் மக்களுக்கு ஐந்தாண்டுகள் உழைக்க ஆர்வத்தோடும் சிறப்பான திட்டங்களோடும் காத்திருக்கிறார். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும்.
காரைக்குடிக்கு குடிநீர் வேண்டுமென பட்டினிப் போராட்டம் நடத்திய பழ.கருப்பையா தியாகராய நகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர்.ஜெயலலிதாவின் ஊழலைக் கண்டித்து தன் எம்.எல்.ஏ பதவியை உதறிவிட்டு வந்த கொள்கைப் பற்றாளர். வாழும் காந்தியரான பழ. கருப்பையாவிற்கு தி.நகர் மக்கள் வாக்களிக்கவேண்டுகிறேன்.
பொதுத்தேர்வுகளில் பெண்கள் முதலிடம் பிடிப்பது போல பொதுத் தேர்தல்களிலும் முதலிடம் பிடிக்க வேண்டும்.
சமவாய்ப்பு, சமநீதி என மாதர் நலம் போற்றும் மநீமவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
@maiamofficial @sripriyarajkumar
அன்னையர் பூமியை அழியாது காக்க கேள்விகளால் வேள்வி செய்யும் வீரத்திருமகள்கள் வெல்க. @maiamofficial @chennai_tamizhachi
மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனைக்கும் முதல் குரலாய் ஓங்கி ஒலிக்கும் சென்னை தமிழச்சி பத்மப்ரியா மதுரவாயல் தொகுதியின் வெற்றி வேட்பாளர். மிக இளம் வயதிலேயே மக்கள் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பத்மப்ரியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
40 ஆண்டுகளுக்கு முன்னரே நான் துவங்கிய நற்பணிகளுக்கான தளபதி தங்கவேலு கோயம்புத்தூர் வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர். மக்களோடே இருப்பவர், மக்களுக்காகவே உழைப்பவர். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
தேடிவந்து அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் கோவை மக்களின் அன்பில் நெகிழ்கிறேன்.
மக்கள் மருத்துவர், முன்னோடி விவசாயி, நேர்மையான தொழிலதிபர் என பன்முகம் கொண்ட டாக்டர் ஆர். மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர். தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறமையும் கொண்ட அவரை வெற்றி பெறச் செய்யும்படி சிங்காநல்லூர் தொகுதி மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Food Bank India அமைப்பினைத் துவங்கி ஆதரவற்றோரின் பசிப்பிணி போக்கும் சினேகா மோகன்தாஸ் சைதாப்பேட்டை தொகுதியின் வெற்றி வேட்பாளர். இந்த முன்னுதாரணப் பெண்ணை சட்டசபைக்கு அனுப்ப டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
“தமிழறிஞர்கள்” – திரு. அ.கா. பெருமாள்
இன்று நான் பரிந்துரைக்க இருக்கும் நூலின் ஆசிரியர் அ.கா. பெருமாள் மிக முக்கியமான நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நாட்டார் மரபின் வரலாற்று ஓட்டத்தை ஆய்வுப் புலத்துக்குள் கொண்டு வந்தவர். அவர் எழுதிய ’தமிழறிஞர்கள்’ எனும் முக்கியமான நூலை இன்று உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
பெண் சக்தி செயல் திட்டத்தில், இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் அளிக்க விழையும் மநீம, ஒவ்வொரு நாளும் பெண்மையைப் போற்றுகிற கட்சி. @maiamofficial @mookambikarathinam
மைலாப்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீப்ரியா. தனது புகழும், செல்வமும், அனுபவமும் மக்களுக்கு நல்லது செய்ய பயன்பட வேண்டுமென களத்தில் நிற்கும் சிங்கப் பெண் ஸ்ரீப்ரியா மைலாப்பூரின் மகள். அவரது குரலை கோட்டையில் ஒலிக்கச் செய்யுங்கள்.
பண்பாட்டுச் செழுமை கொண்ட காஞ்சிபுரத்தின் பெருமைகளை மீட்டெடுக்க பற்பல திட்டங்களுடன் களம் இறங்குகிறார் கோபிநாத். மக்கள் சேவகரான கோபிநாத்தின் குரல் காஞ்சிபுரத்திற்காக சட்டசபையில் ஒலித்தாக வேண்டும். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
பால் முகவர், தொழிற்சங்க செயற்பாட்டாளர் பொன்னுசாமி பெரம்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர். வெள்ளத்தில் சென்னை தத்தளித்தபோது பால்முகவர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்தவர். பலரின் உயிரைக் காத்தவர். பொன்னுசாமியை வெற்றி பெறச் செய்யுங்கள்.
திருவெறும்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் M.முருகானந்தம்.தன்னலமற்ற சேவைக்காக அமெரிக்கா வழங்கும் விருதினை இளம் வயதிலேயே வென்றவர்.சிறந்த தொழில்முனைவர்.தொகுதியின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு வைத்திருக்கும் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.