அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும், உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும்.
மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்.
73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்கவைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
அரிதினும் அரிது பிறருக்குப் பயன் தர வாழ்தல். அதனினும் அரிது மரணவாதையில் மருள்வோரைத் தாங்கல். புற்றுநோயாளர்களின் அச்சத்தை நீக்கும் அடைக்கலமாய்த் திகழும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் காரணகர்த்தரான டாக்டர் சாந்தா அம்மையார் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலி.
தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான் கிளாட் கேரியார் இன்று காலமானார் அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும்.
அரசியல் மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தும் முன், மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்கட்டும் என கேரளத்தின் புகழ் மிக்க தெரஸா கல்லூரி மாணவிகளிடம் ஆற்றிய உரையை இங்கே பகிர்கிறேன்.
தமிழக மாணவர்களின் அரசியல் பங்களிப்பு உலகறிந்தது. வரும் தேர்தலில் அவர்கள் நேர்மையைத் தேர்ந்தெடுப்பார்கள். #மாணவர்_வாக்கு_நேர்மைக்கே
My beloved friend and the Honourable Chief Minister of Delhi,Mr.Arvind Kejriwal will replace Government vehicles with E-Cars within 6 months.
He has initiated the ‘Switch Delhi’ scheme as a step towards pollution control. In an effort to make this a people’s movement he has announced grants to those who come forward to buy E-Vehicles. He has ensured that the schemes don’t just remain on paper and has taken efforts to ensure that they are implemented effectively.
My best wishes to Mr.Arvind Kejriwal
நாளை நம் தேசிய வாக்காளர் தினம்.
நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது.
தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது.
முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம். #நாளைநமதே
நாளை நம் தேசிய வாக்காளர் தினம்.
நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது.
தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது.
முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம். #நாளைநமதே
காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது.
சம ஊழியம் – சம ஊதியம், தொற்று தாக்கியவர்களுக்கு நிவாரணம் – இழப்பீடு, தொகுப்பூதிய முறை ரத்து, உரிய பதவி உயர்வு, புதிய பணியிடங்கள் என போராடும் செவிலியர்களுக்கு, தவணைமுறைப் பேச்சுவார்த்தைகள் தவிர்த்து, கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுப்பதே நீதி.
‘என் வாழ்க்கையே என் செய்தி’ என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை.
Jean Claude Carriere , An internationally reputed French Novelist and screenplay writer stepped into his 90th year recently and stepped out of life today. I will miss my young friend always. Our mutual love and our works will live on.
‘பூரண சுதந்திரமே தேவை’ என்று வீரத்தை உயர்த்திப் போர்க்களம் கண்டவர் சுபாஷ் போஸ். இன்று 125ஆவது பிறந்த நாள் காணும் அந்த நேத்தாவுக்கு, ரயில் விடுவது, பராக்கிரம தினமாக அனுஷ்டிப்பதோடு, அவரது கொள்கையை நெஞ்சில் நிறைப்பதே சிறந்த அஞ்சலி.
ஒரு மேடைப் பேச்சு, ஆயிரம் கட்டுரைகளுக்குச் சமம். ஒரு அடிதடிக்கலவரம் ஆயிரம் மேடைப் பேச்சுகளுக்குச் சமம் என்கிறார் ஹிட்லர்.
இங்கும் ஹிட்லரின் வாரிசுகள் உண்டு. தேர்தல் சமயத்தில் எப்படியாவது பிற மதத்தவரின் உணர்ச்சிகளைத் தூண்டி, மதக்கலவரங்களை உருவாக்கி, வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சிகள் இங்கும் நிகழ்கின்றன.
சமத்துவமும் சமூகநீதியும் பேசும் தமிழகத்தில், உங்கள் சதித்திட்டங்கள், எம் மக்களின் சகோதரத்துவத்தால் என்றென்றும் முறியடிக்கப்படும் மூடர்களே.
தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டு யானைக்குக் காட்டக்கூடாதா?
கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?
“சீரமைப்போம் தமிழகத்தை” எனும் எமது தமிழ்க் கனவின் இன்னொரு அங்கம்தான் “புதியதோர் புதுவை செய்வோம்” என்பதுவும். இன்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுவை அரசியலின் புதிய அத்யாயம் ஆரம்பமாகி விட்டது. நாளை நமதே!
அரசுப் பயன்பாட்டுக்கான கார்களை மின்வாகனங்களாக 6 மாதங்களுக்குள் மாற்றுகிறார் என் நண்பரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால்.
மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை முன்வைத்திருக்கிறார்.
மின்வாகனப் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார்.
அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்.
கிராம சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூட்டம் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்திருப்பது, மக்களை எதிர்கொள்ள அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும் #நான்_கேட்பேன்
மருத்துவர் கோரிக்கைகள் கிடப்பில். செவிலியர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். மருத்துவ மாணவர் கட்டணப் பிரச்னையால் தவிப்பு. மருத்துவம் படிக்க விரும்புவோர்க்கும் தடைகள்… உயிர்காக்கும் துறையைத் தேர்ந்தெடுப்போரை என்னதான் செய்ய உத்தேசம்?
மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் 4-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாற்றத்திற்கு வாக்களியுங்களென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள்.
மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.
மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது.