Anitha Sampath Instagram – மலேசியா எல்லா தமிழர்களுக்கும் ஒரே மாதிரியானதாக இல்லை.
சிலருக்கு கூடுதல் காசை செலவழிக்க சுற்றுலா வரும் நாடு, சிலருக்கு சிறுக சிறுக காசு சேர்த்து வெளிநாடு செல்ல நினைத்த பல நாள் கனவை நிறைவேற்றும் நாடு, சிலருக்கு காலம் காலமாய் இங்கேயே குடி கொண்டு தாய்வீடாக மாறிப்போன வேற்று மொழி நாடு,சிலருக்கு கிராமத்தில் இருந்து சிறு சிறு வேலைக்காக பல வருடம் அக்ரீமெண்ட் போட்டு வாழ்க்கையை தொடங்க ஆசை ஆசையாய் வந்திருக்கும் நம்பிக்கை நாடு.💖
என் புள்ள வெளிநாட்ல வேலை பாக்குறான்னு எத்தனையோ கிராமத்து தாய்மார்கள் சொல்லக்கேட்டிருப்போம்.
தன் குடும்ப வளர்ச்சிக்காக அந்த மகன்கள், அண்ணன்மார்கள், கணவன்மார்கள் எல்லாம் குடும்பத்தையும் குழந்தைகளையும் பல வர்ஷதுக்கு ஒரு முறை போய் பாத்துக்கிட்டு , என்னைக்காவது ஒரு நாள் நல்ல நிலைமைக்கு வந்துடுவோம்னு இங்க எத்தனை எத்தனை கனவுகளை சுமந்துக்கிட்டு வாழுறாங்கனு பார்க்கவே பிரம்மிப்பா இருந்துச்சு.🥹
பெரும்பாலும் உணவகங்களுக்கும் சிறு சிறு கடைகளுக்கும் தான் அதிகமா நானும் பிரபாவும் போனோம். அங்க டேபில் துடைக்கும் தம்பி முதற்கொண்டு, கல்லாப்பெட்டியில உட்கார்ந்திருக்கும் அண்ணா வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான்.💐
போன இடமெல்லாம்
கோவை,காரைக்குடி ,கரூர் ,சேலம், புதுக்கோட்டை, திருநெல்வேலினு நம்ம தமிழ்நாட்டோட அத்தனை தமிழர்களுடைய slang- அயும் கேக்கவே அவ்ளோ மகிழ்வா இருந்துச்சு..
எல்லாரும் அவ்ளோ அன்பு காட்டுனாங்க.🙏🏼🙏🏼🥰😍
வந்தாரை வாழ வரைக்கும் மலேசியா…தமிழர்களை கொஞ்சமும் அன்னியமா உணர வைக்காத அழகு நாடு மட்டும் அல்ல எண்ணற்ற மனிதர்களோட கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் அற்புத நாடு💖
We love u malaysia
And we miss u😘
See you soon🥰
@itsme_pg
#malaysia
#byebyemalaysia
#anithasampath
#coupletravel | Posted on 29/Aug/2022 15:52:27