Anitha Sampath Instagram – Half bday😃என் “housing board anitha”to “house owner anitha sampath” பயணம் அவ்வளவு எளிதானது இல்ல.நான் விடியற்காலையில எழுந்து செய்தி வாசிக்க போறப்ப வீட்ல எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க. நான் வேலை முடிச்சி லேட்டா வரும் போது எல்லாரும் தூங்கிடுவாங்க.அப்பா அம்மா கூட நேரம் செலவிட முடியலயேனு அவ்ளோ கவலையா இருக்கும்.ஆனாலும் சின்ன ஷோ பெரிய ஷோனு பாக்காம, நேரம் காலம் பாக்காம நம்ம குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரனும், உண்மையா நேர்மையா நல்லா சம்பாதிக்கணும் ங்கிறத மட்டுமே நினைச்சி உழைப்பேன்.
எனக்கு பக்க பலமா இருந்தது பிரபா .மணிக்கணக்கா phoneல அப்றம் …. அப்றம்…னு கொஞ்சி சினுங்குற சினிமா காதல் இல்லை எங்க காதல்.
ஆரம்பத்தில இருந்தே ரொம்ப முதிர்ச்சியடைந்த காதல். ரெண்டு பேரும் media.. but வேற வேற job nature.
எங்க குடும்பங்கள், எங்க முன்னேற்றம், சேமிப்பு, எங்க வேலை,எங்க கனவுகள், இதை பத்திதான் அதிகம் பேசிப்போம்.இதன் ஊடே எங்க அன்பு,பாசம்,காமெடி,சிரிப்பு,காதல் எல்லாமும்…
சைக்கிள் வாங்க முடியாம வடபழனி to கோவூர் நடந்தே போற ப்ரபா கதை,
நாப்கின் வாங்க காசில்லாம 2km பீரியட்ஸ்ல கரையோடயே நடந்து டூஷன் எடுக்கிற வீட்ல நாப்கின் வாங்கி மாத்துன என்னோட கதை,
இப்படி எங்க சொந்த struggle stories தான் எங்களுக்கு மாத்தி மாத்தி inspirations.
எங்க 6 வருட காதல்..ரெண்டு பேருடைய கனவையும் ஒரே கனவா ஆக்குச்சு.
We chased our dreams together.. and this happend.. 29 & 30 வயசுல சொந்த வீடு.. இவ்வளவு இளமைக்காலத்துல சொந்த வீடு வாங்குனது எங்க ரெண்டு பேரு குடும்பத்திலயும் இதுதான் முதல்முறை.
எங்க கனவு வீட்டுக்கு இன்று
Half birthday 🎉😃
6 months of happiness💕
Happy home😍
சொந்த வீடு இருக்குற partnerஅ தேடுறத விட… மனசுக்கு புடிச்ச partner கூட சேர்ந்து உழைச்சி சொந்த வீடு வாங்குற சுகம் தான் அழகானது💖
Love u pappu @itsme_pg
5 days youtube trendingல
இருந்த lucky house😅 🏡 thanks to all my followers and subscribers✅love u all😘
Neenga elarum sikrame veedu vanguvinga💖💪🏻 昆德拉图尔 | Posted on 10/Nov/2022 17:22:45