Anitha Sampath Instagram – கடந்த 9 வருடமா diwali dress லாம் எடுக்குறதே இல்ல. எது இருக்கோ அந்த ட்ரஸ்ஸ போட்டுக்குறது.சின்ன வயசுல ரெண்டு வாரம் முன்னாடியே புது மாடல் லாம் பாத்து பாத்து டிரஸ் வாக்கிருவோம்..தைக்க குடுத்துடுவோம்😀..இப்போ..டிரஸ் நிறைய போட்டுக்குற fieldல வேலை செய்யுறதாலயா, இல்ல வளர்ந்துட்டதாலயானு தெரியல, புது டிரஸ் ஆசையெல்லாம் கடந்தாச்சு..
ஆனா இப்போ புது வீட்டுல முதல் தீபாவளி..
சாமிக்கு வச்சி படைச்சி புது துணி உடுத்தி ப்ராப்பரா கொண்டாடலாம்னு பல வருடம் கழிச்சு புத்தாடை எடுக்க கரெக்ட்டா ஒரு நாள் முன்னாடி குடும்பத்தோட வந்திருக்கோம் 😇
With எல்லா ஆண்களையும் போல வீட்டு பெண்கள் டிரஸ் எடுத்து முடிக்கும் வரை காத்திருப்போர் சங்கத்தில் ஒருவன் @itsme_pg
Shop @instorefashions | Posted on 23/Oct/2022 14:26:14