Anitha Sampath Instagram – அப்பாவுக்கு இன்னக்கி பிறந்தநாள்🤍
போன வருடத்தின் இந்த பதிவை மீண்டும் பதிவிடுகிறேன்.
இதை விட என் மன ஓட்டத்தை சரியாக சொல்ல வேறு பதிவை எழுதிவிட முடியாது.
பண்டிகை நாளில் பிறந்தநாள் வருவது வரமென நினைத்தவள். அது ஒரு பாரம் என தெரிகிறது அவர்களை இழந்தபின்பு,நல்ல நாளில் மனவேதனையோடு பண்டிகையை கொண்டாடும் போது.
நாங்கள் கட்டிய வீட்டை நீ பார்த்திருக்க வேண்டும் டேடி!! என் பொண்ணு 29 வயசுல பெரிய வீடு கட்டியிருக்கானு ஊரெல்லாம் போன் பண்ணி சொல்லி பெருமப்பட்டிருப்ப..
பல பிள்ளைகள் நல்ல இடத்திற்கு வர போராடும் போதெல்லாம் இருக்கும் பெற்றோர்..அவர்கள் நினைத்ததை அடைந்த பின் திரும்பிப்பார்க்கும் போது ஏனோ இருப்பதில்லை😶
இப்ப அம்மா இருந்த நல்லாருக்குமே..
இப்ப அப்பா இருந்தா நல்லாருக்குமேனு ஏங்க வச்சிடுராங்க..
என்னைப்போன்றே குடும்பத்தில் ஒருவரை இழந்து வலிகளோடு சிரித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த அன்புத்தோழியின் virtual hug.
பெற்றோர்கள் கூடவே இருப்பின்..இருக்கும்போதே நல்லா பாத்துக்கோங்க என்னும் அன்பு வேண்டுகோள்.
அப்பாவா..அம்மாவா..நண்பனா..எல்லாமுமா என் கண்ணீரை துடைத்து “விட்றா கன்னுக்குட்டி எது நடந்தாலும் பாத்துக்கலாம்னு நான் இன்னக்கி உயிரோட இருக்க காரணாமான…
என் பெற்றோருக்கும் மகனா இருந்து பார்த்துக்கிட்ட..இன்னும் பார்த்துக்குற…என் உலகத்திற்கு மிக்க நன்றி!🙏🏼@itsme_pg ❤️
Celebrate your parents when they are alive!! Proud daughter!!
-Anitha SAMPATH | Posted on 16/Jan/2023 12:31:21