R. Sarathkumar Instagram – 29.03.2013 – சென்னையில் ஒரு நாள் திரைப்படம் வெளிவரக் காரணமான ஓர் உண்மை சம்பவத்தின் நாயகன் திரு.மோகன் அவர்களை, நேற்றைய தினம் எனது THOR – ஐ அழைத்துக் கொண்டு நடைபயிற்சி சென்ற போது நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
20.09.2008 – திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 15 வயது ஹிதேந்திரன் விபத்துக்குள்ளாகி, துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்ததில் அவரின் இதயத்தை, அப்போதைய கூடுதல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் உதவியுடன் தேனாம்பேட்டை அப்பல்லோவில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு 75 நிமிடத்தில் கடக்கக்கூடிய தொலைவை 11 நிமிடங்களில் கடந்து இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியவர் திரு.மோகன் அவர்கள்.
உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை அழுத்தமாக, உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்டி, ஹிதேந்திரன், சிறுமி அபிராமி இப்பூவுலகை விட்டு நீங்கினாலும், என்றும் நினைவில் நிற்பவர்கள். மனிதநேயம், மனதில் துணிவு கொண்டு அச்சமயம் உயிரைக்காத்த அனைவரும் உண்மை நாயகர்கள். அந்த வகையில், தற்போது நீலாங்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு.மோகன் அவர்களை சந்தித்து உரையாடியதில் நெகிழ்கிறேன்.
.
.
.
.
.
.
.
.
#chennaiyilOruNaal #hearttransplant #emergencyservices #humanity #HumanityFirst #spreadloveandkindness #humanlife #humanlifematters | Posted on 12/May/2023 18:11:44