D. Imman Instagram – எங்களிடம் எல்லாம் பேசுவார்களா என்று குழந்தையின் கேள்விக்கு பதில்.
குழந்தை முகத்திலும் குடும்பத்தின் முகத்திலும் அவ்வளவு சந்தோசம்.
சென்று வாரம் விழுப்புரத்தில் சேர்ந்த தர்ஷினி அவர்களின் பாடல் சமூக வலைத்தளத்தில் பார்த்து அவர்களின் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கேட்ட இசையமைப்பாளர் இமான் சார் அவர்களின் பதிவை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
அவர்களின் தொலைபேசி எண் கிடைத்தவுடன் அவர்களுக்கு போன் செய்து கண்டிப்பாக உங்களுக்கு பாட வாய்ப்பு தருகிறேன் என்று கூறியிருந்தார் இசையமைப்பாளர் இமான் சார் அவர்கள்.
இதைத் தவிர அவர்களுக்கு ஏதாவது வேண்டுமா? என்று கேட்டு அறிய நான் அங்கு சென்றிருந்தேன்.
அப்பொழுது தர்ஷினி அவர்கள் எனக்கு வேறு எதுவும் வேண்டாம் சாரிடம் ஒரு தடவை வீடியோ காலில் பேச வேண்டும் என்று கூறினார்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக உடனடியாக வீடியோ காலில் வந்து பேசிய இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
எதிர்பாராத விதமாக அங்கு இருந்த பார்த்திபன் சார் அவர்களும் பேசியது மிக்க மகிழ்ச்சியை தந்தது.
ஒரு நிமிடம் ஒரு குடும்பத்தையே வியப்பில் வாழ்த்திய இசையமைப்பாளர் இமான் சார் அவர்களுக்கும் பார்த்திபன் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 | Posted on 01/Dec/2023 15:02:54