M. K. Stalin Instagram – உயிரெனப் போற்றும் உயர்கல்வியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் 96 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்களைத் திறந்து வைத்தேன்.
உயிராக நம்மை இயக்கும் தமிழுக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைக்கு மார்பளவு சிலை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய பெரும்புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்.
விடுதலைப் போராட்ட வீரர்களான குயிலி – வாளுக்கு வேலி அம்பலம் மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், அண்ணல் காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோர் சந்திப்பின் நினைவாக அரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
@e.v.velu @rsrajakannappan @tndipr @mp_saminathan @geethajeevanthoothukudi | Posted on 23/Jan/2024 15:02:39