M. K. Stalin Instagram – இன்றைய என்னுடைய நிகழ்ச்சிகள்….
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து, பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கினேன்.
மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும்
சிறந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கினேன்.
பெரியபாளையம் – அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில்,
மேல்மலையனூர் – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்,
ஆனைமலை – அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்
ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக
ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன்.
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்குத் திட்ட ஒப்புதல் அரசாணைகள் மற்றும்
ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 17 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையாக 9.25 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினேன். | Posted on 22/Jan/2024 21:14:01