M. K. Stalin Instagram – #NoCAAInTamilNadu:
#CitizenshipAmendmentAct சட்டவரைவாக இருந்த நிலையிலேயே எதிர்த்தோம், நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தோம்!
சட்டமானதும் #SignatureAgainstCAA இயக்கம் நடத்தினோம், பேரணி நடத்தினோம்; போராடினோம்!
ஆட்சிக்கு வந்ததும் #CAA-வைத் திரும்பப் பெறச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்!
நடைமுறைப்படுத்தப் போவதாக ஒன்றிய அமைச்சர் பேசியபோது, “தமிழ்நாட்டில் CAA கால்வைக்க விடமாட்டோம்” என உறுதிபட அறிவித்தேன்.
நேற்று #CitizenshipAmendmentRules2024 அறிவிக்கை வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை உரத்துச் சொல்கிறேன்:
தி.மு.க அரசு தமிழ்நாட்டில் #CAA நடைமுறைப்படுத்தப்படுவதை நிச்சயம் அனுமதிக்காது! | Posted on 12/Mar/2024 18:12:27