நானும் ஒரு டெல்டாகாரன் என்ற பாச உணர்வோடு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன்.
சிலர் போல, தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள். எப்போதும் எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களோடு அவர்களின் உரிமைகளுக்காக நிற்பவர்கள்!
நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள் என்றும் நம் பக்கம்!
#DravidianModel
சுற்றுச்சூழலுக்கும் தூத்துக்குடி மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவித்த #Sterlite ஆலையை நிரந்தரமாக மூடுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்த நமது #DravidianModel அரசுக்குத் தூத்துக்குடி மக்கள் சார்பாக வந்திருந்த குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
அவர்கள் வைத்த மற்ற கோரிக்கைகள் பற்றி தங்கை @kanimozhikarunanidhiofficial அவர்கள் எடுத்துரைத்தார். அவற்றையும் அரசு கவனத்தில் கொண்டு பரிசீலிக்கும்.
மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!
பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்.
Presenting a special compendium by @Outlookindia featuring Tamil Nadu’s #DravidianModel Government led by #DMK.
Explore the remarkable journey of progress and empowerment. Dive into Tamil Nadu’s success story here:
Link in Bio
மார்ச் 6!
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது.
மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்!
மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?
ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் #NeengalNalama திட்டம்.

#எல்லோருக்கும்_எல்லாம்
161 பொதுக்கூட்டங்கள்,
90 பேச்சாளர்கள்,
இலட்சக்கணக்கான மக்கள்!
தமிழ்நாட்டை வளமாக்கும் நமது #TNInclusiveBudget-ஐ விளக்கும் பொதுக்கூட்டங்கள்!
#DravidianModel நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனைகளைத் தோலுரித்த நமது பேச்சாளர்கள்!
கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் – உங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைச் செம்மைப்படுத்தவும் #நீங்கள்_நலமா திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
#தோழி_விடுதி திட்டம் குறித்துப் பேசிய சகோதரி, அந்த விடுதிகளை #WellBeingCentre-களாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்தினை முன்வைத்தார். அவரது இந்தக் கருத்து நிச்சயம் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்வோம்! தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போம்!
#NeengalNalama
குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனி வரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள்!
கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக்குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்!

இன்றைய #KolathurVisit-இல், அரசு சார்பிலும் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.
மேயர் சிட்டிபாபு பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட ரூ.36.99 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.205.40 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
#AnithaAchieversAcademy-இல் பயிற்சி முடித்த 482 மாணவ – மாணவியர்க்குச் சான்றிதழ், மடிக்கணினி மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினேன். இந்தப் பயிற்சி மையத்தில் இதுவரை 1,742 மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, மடிக்கணினி உள்ளிட்டவற்றை வழங்கி, வேலைவாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளோம்.
கட்சி, ஆட்சி இரண்டையுமே தொய்வற்ற மக்கள் பணிக்கான நல்வாய்ப்பாகவே எண்ணிச் செயல்பட்டு வருகிறோம்!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.
தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.
பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!
இந்தத் தொகுப்பில்,
🌾 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்,
♦ 210.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் திறப்பு,
♦ சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு அடிக்கல்,
♦ நம்மாழ்வார் விருதுகள்
👩🏫கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம்
🐄 கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில்,
கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு,
புதிய கட்டடத்திற்கு அடிக்கல்.
@mrk.panneerselvam #AnithaRadhakrishnan
தமிழ்நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தொலைநோக்குப் பார்வையோடு கடந்த 26.10.2010-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ரூ.10,158 கோடி மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட #NCTPS (Stage-III) திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
ஆணையிடப்பட்டதிலிருந்து மூன்றாண்டுகளில் முடிக்க எண்ணியிருந்த இந்தத் திட்டம், ‘கலெக்ஷன் – கரப்ஷன் – கமிஷன்’ அதிமுக ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்றதும் மூன்றாண்டுகளில் முடுக்கிவிட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளோம்.
அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்!
போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்…
நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி!
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!
எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!
@siva.v.meyyanathan @kanimozhikarunanidhiofficial #AnithaRadhakrishnan @geethajeevanthoothukudi @supriyasahujs
காவல்நிலையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டோரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்துக் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை வளர்க்குமாறு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கேட்டுக்கொண்டேன்.
இல்லந்தோறும் எனது குரலாக உடன்பிறப்புகள் நீங்கள் ஒலித்து, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதே எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு.
அதுதான் நம்மை எல்லாம் வார்ப்பித்த தலைவர் கலைஞர் நூற்றாண்டில் அவருக்கு நாம் செலுத்தும் நன்றி!
பா.ஜ.க.வின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு, பாசிச ஆட்சியை அகற்றுவோம்!
#LetterToBrethren