M. K. Stalin Instagram – இன்றைய #KolathurVisit-இல், அரசு சார்பிலும் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.
மேயர் சிட்டிபாபு பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட ரூ.36.99 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.205.40 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
#AnithaAchieversAcademy-இல் பயிற்சி முடித்த 482 மாணவ – மாணவியர்க்குச் சான்றிதழ், மடிக்கணினி மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினேன். இந்தப் பயிற்சி மையத்தில் இதுவரை 1,742 மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, மடிக்கணினி உள்ளிட்டவற்றை வழங்கி, வேலைவாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளோம்.
கட்சி, ஆட்சி இரண்டையுமே தொய்வற்ற மக்கள் பணிக்கான நல்வாய்ப்பாகவே எண்ணிச் செயல்பட்டு வருகிறோம்! | Posted on 07/Mar/2024 21:09:23