M. K. Stalin Instagram – சுற்றுச்சூழலுக்கும் தூத்துக்குடி மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவித்த #Sterlite ஆலையை நிரந்தரமாக மூடுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்களை முன்வைத்த நமது #DravidianModel அரசுக்குத் தூத்துக்குடி மக்கள் சார்பாக வந்திருந்த குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
அவர்கள் வைத்த மற்ற கோரிக்கைகள் பற்றி தங்கை @kanimozhikarunanidhiofficial அவர்கள் எடுத்துரைத்தார். அவற்றையும் அரசு கவனத்தில் கொண்டு பரிசீலிக்கும். | Posted on 02/Mar/2024 17:07:27