R. Sarathkumar Instagram – தேமுதிக நிறுவனரும், அன்பு நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களின் மறைவின் போது, தவிர்க்கமுடியாத சூழலில் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்ப இயலாத காரணத்தினால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இயலாததை எண்ணி வேதனையில் இருந்த நான், இன்று சென்னை திரும்பியதும் கேப்டன் அவர்களின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
சாலிகிராமத்தில் அமைந்துள்ள சகோதரர் புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாரை நேரில் சந்தித்து எனது இதயப்பூர்வமான ஆறுதலை எனது குடும்பத்தின் சார்பாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் தெரிவித்துக் கொண்டேன்.
#captainvijaykanth | Posted on 03/Jan/2024 18:11:36