Hemalatha M Instagram – வாழ வைக்கும் தமிழ்நாடு அரசு❤️🔥
1️⃣ அபிராமி – வயது 40 . திருமணத்திற்கு பிறகு வீட்டுவேலை, பூ கட்டி கொடுத்தல் என பல வேலைகள் செய்து சிறிய சம்பளம் கிடைத்துள்ளது. ஒரு கிலோ பூ கட்டி கொடுத்தால் 5 ரூபாய் கொடுப்பார்களாம். வாழ்க்கையே வெறுத்து போனவருக்க அடைக்கலமாய் இருந்தது மகளிர் சுய உதவிக்குழு. கடந்த வருடம் ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி பெற்றுள்ளார்
2️⃣ பாக்யா– வயது 33 , 8 ஆம் வகுப்பு.கடந்த 2 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். குடும்பத்தில் கடன் சுமை அழுத்த, பல வேலைக்கு சென்றுள்ளார். மகளில் சுய உதவிக்குழு மூலம் பெண்களுக்கான பயிற்சிகள் மற்றும் கடன்கள் வழங்குவது பற்றி கேள்விபட்டு அதில் இணைந்து ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி பெற்று ஆட்டோ ஓட்டி கடந்த 2 வருடத்தில் வீட்டு மேல் இருந்த 2 லட்ச ரூபாய் கடன் அடைத்திருக்கிறார்.
3️⃣ சத்யவாணி வயது 40. 23 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிப்பு. இவருக்கு 3 பெண் குழந்தைகள். ஆண் குழந்தை வேண்டும் என இவருடைய கணவர் இவரையும், இவருடைய பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
2000 ஆம் ஆண்டு அன்று கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக ஓட்டுனர் பயிற்சி பெற்று ஆட்டோ ஓட்ட தொடங்கி தன்னுடைய பெண் குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறார்.
இவர்கள் 3 பேரும் மகளர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்கள்.தமிழ்நாடு அரசு இப்போது அவர்களுக்கு மின் ஆட்டோக்களை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் இவர்கள் பொருட்களை கூட விற்பனை செய்ய முடியும்.
இது போல லட்சக்கணக்கான கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. அரசை குறை கூறுவதற்கும் , அரசு நலத்திட்டங்களை குறை கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
🔆 அம்மா வயல் வேலைக்கும், அப்பா கூலி வேலைக்கும் அதிகாலையிலேயே செல்ல, காலை உணவாக இரவு மீந்த உணவை காலை சாப்பிட்டோ அல்லது பசியாகவோ பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு தான் தெரியும், காலை உணவுத்திட்டத்தின் அருமை.
அரசின் திட்டங்களை குறை சொல்பவர்களுக்கு, நமக்கு தேவைப்படாத ஒன்று எல்லோருக்கும் அப்படிதான் இருக்கும் என நினைப்பது மடத்தனம்.இந்த படத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் அடிப்படை வாழ்வாதாரமாக இருப்பது அரசின் திட்டங்கள்.இதுதான் தமிழ்நாடு🔥வாட்ஸ் அப் வாந்தியை நம்புவதற்கு / கேட்பதற்கு முன் வரலாறு படியுங்கள்..இன்னும் நிறைய பேசுவோம்😎 | Posted on 03/Apr/2025 21:22:14