Hemalatha M Instagram – ஆண்களுக்கு நன்றிகள் 😎
Successfully completed my 15th Batch Digital Marketing online classes ❤️
இந்த முறை பல பெண்களின் கணவர்கள் என்னுடைய Motivation வீடியோக்கள் பார்த்து, தங்களுடைய மனைவிகளிடம் நீயும் அவங்கள மாதிரி தைரியமா இரு.. புது விஷயங்கள கத்துக்கோ என என் வகுப்புகளுக்கு Register செய்திருக்கிறார்கள். மகழ்ச்சிக்குரிய விஷயம். மிக்க நன்றிகள். மேலும் இந்த வகுப்புகளில்,
பல துறைகளில் அனுபவம் கொண்டு , 56 வயதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்க வேண்டும் என இணைந்து ஆர்வமாக கற்றுக் கொண்டது🔥
17 வருடங்களாக டெய்லரிங் துறையில் இருந்தும் சில தயக்கம் காரணமாக Social Media வில் Post போட தெரியாமல் இருந்து என் வகுப்பு முடிந்ததும், இனி தைரியமாக Post போடுவேன் என கூறியது🔥
10 வருடங்களாக ஊடகத்தில் இருந்து இப்போது Cloud Kitchen தொடங்கி Social Media குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்து கற்றுக் கொண்டவர் 🔥
என, உற்சாகமாக, நம்பிக்கை கதைகள் நிறைந்த வகுப்பாக இருந்தது❤️
இந்த வகுப்பில் Property seller, Wellness coach , Cotton Manufacturer ,Doctor, Makeup artist, Fashion designer, Gymnastic academy owner, Homeopathy Doctor, Tailor, Medical coder, Maths tutor, Naturopathy therapist,Insurance advisor, Robotics company manager,Document writer என பலதுறைகளில் இருந்து பங்கேற்றார்கள்.
கடந்து வகுப்புகளில் இருந்து Anand SP என்னோடு இணைந்து Designing & Marketing on Own Brands வகுப்புகளையும் எடுக்கிறார். மிக்க நன்றி சார்💐
இந்த வகுப்புகளின் மூலம் நான் தெரிந்து கொண்டது, இன்னும் பல பேருக்கு சமூக வலைதளங்களை நம் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இன்னும் பல லட்சம் பேருக்கு இந்த வகுப்புகளை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்❤️
நிதானமாக, இலக்கை நோக்கி பயணிப்போம். சமூக வலைதளங்களை Positive ஆக பயன்படுத்தி முன்னேறுவோம்.🥰
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🥰
#HemaRakesh #celebritycreator #womenempowement | Posted on 01/Apr/2025 22:03:04